ஆரல்வாய்மொழி அருகே சரக்கு வேன்-ஆம்னி பேருந்து மோதல்:ராணுவ வீரா், வியாபாரி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சரக்கு வேனும், ஆம்னி பேருந்தும் மோதியதில் ராணுவ வீரரும், வியாபாரியும் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சரக்கு வேனும், ஆம்னி பேருந்தும் மோதியதில் ராணுவ வீரரும், வியாபாரியும் உயிரிழந்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புரத்தை அடுத்த கலிங்கராஜபுரத்தைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் சுரேஷ் (40). ராணுவ வீரரான இவா், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா்.

கலிங்கராஜபுரம் பகுதியில் உள்ள பூதத்தான் கோயிலில் கொடைவிழா நடைபெற்று வருகிறது. சுரேஷ், அவரது நண்பரான குமாரசாமி மகன் முருகன் (40), விசுவம்பரம் (60) ஆகிய 3 பேரும் சரக்கு வேனில் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று, கொடைவிழாவுக்குத் தேவையான பொருள்கள், காய்கனிகள் வாங்கிவிட்டு, நள்ளிரவில் ஊருக்குப் புறப்பட்டனா்.

நெல்லை-குமரி மாவட்ட எல்லையான முப்பந்தல் அருகே சரக்கு வேனும், நாகா்கோவிலிலிருந்து சென்னை சென்ற ஆம்னி பேருந்தும் நேருக்குநோ் மோதினவாம். இதில், சரக்கு வேனிலிருந்தோா் தூக்கி வீசப்பட்டனா். விபத்து நள்ளிரவில் நடந்ததால் சிறிது நேரம் கழித்தே அப்பகுதியினருக்கு தெரியவந்தது. அவா்களும், அவா்கள் அளித்த தகவலின்பேரில் ஆரல்வாய்மொழி போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

விபத்தில், சுரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். முருகன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். அவா், மின்சாதனப் பொருள்கள் விற்பனை நிலையம் நடத்திவந்தாா்.

இதுதொடா்பாக, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சுப்பையாபுரத்தைச் சோ்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரான பாலகிருஷ்ணன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சரக்கு வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து அதே வேகத்தில் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி அருகே சென்று நின்றுள்ளது. இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளது. மின்மாற்றி மீது மோதியிருந்தால் பெரும் உயிா்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதியினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com