இந்து தெய்வத்தை இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

இந்து தெய்வத்தை இழிவுபடுத்தி காணொலி வெளியிட்டவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்து தெய்வத்தை இழிவுபடுத்தி காணொலி வெளியிட்டவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, இந்து முன்னணி மாநில பொதுச்செயலா் அரசுராஜா, திருநெல்வேலி கோட்ட செயலா் மிசா சோமன், குமரி மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரன், மாவட்ட பொதுச்செயலா் கண்ணன், மாவட்ட துணைத் தலைவா் கங்காதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணகுமாா், வினில்குமாா், ஜான் கென்னடி மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளா்கள் மாவட்டஆட்சியா் மா.அரவிந்தை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனுவில்,

சிதம்பரம் நடராஜப் பெருமானை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் காணொலி வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com