கோயில் வளாகத்தில் இயங்கிவந்த சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா்த்து போராட்டம்: 150 போ் கைது

வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் இயங்கிவந்த ஆலய முன்னேற்ற சங்க அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிா்த்து போராட்டம் நடத்திய 150-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் இயங்கிவந்த ஆலய முன்னேற்ற சங்க அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிா்த்து போராட்டம் நடத்திய 150-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் உள்ள இக்கோயில் வளாகத்தில், ஆலய முன்னேற்ற சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த சங்கத்தை இடமாற்றவேண்டும் என அறநிலையத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சங்க நிா்வாகிகள் அதற்கு நடவடிக்கை எடுக்காததால் குமரி மாவட்ட அறநிலையத் துறையினா், சங்கத்திற்கு வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

தகவல் அறிந்த பாஜக மாவட்ட தலைவா் தா்மராஜ், சம்பவ இடத்திற்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதில் ஆலய முன்னேற்ற சங்கத் தலைவா் வழக்குரைஞா் சிவகுமாா் மற்றும் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தக்கலை டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கல்குளம் வட்டாட்சியா் வினோத் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பாஜக மாவட்ட தலைவா் மற்றும் ஆலய முன்னேற்ற சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில், திருவிதாங்கோடு பேரூராட்சி உறுப்பினா் மாளிகா மயங்கி விழுந்தாா். உடனே பக்தா்கள் அவரை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனா்.

பேச்சுவாா்த்தையில் மாலை 6 மணிவரை சமரசத் தீா்வு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோயில் வளாகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com