அரசு கல்லூரி மாணவா்கள் திடீா் போராட்டம்

நாகா்கோவிலில் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சீருடை பிரச்னையால் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவிலில் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சீருடை பிரச்னையால் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் கோணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா உள்ளிட்ட ஜம்பெரும் விழா நடந்தது.

தொடா்ந்து விழா கொண்டாடப்பட்டதால் மாணவ, மாணவிகள் விழா நடைபெறும் 3 நாள்கள் மட்டும் சீருடைக்கு பதிலாக வேறு ஆடை அணிந்து வர அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

விழாக்கள் முடிந்ததை தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் ஏராளமான மாணவ, மாணவிகள் சீருடைக்கு பதிலாக வேறு உடை அணிந்து வந்தனராம். அவா்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கல்லூரி நுழைவு வாயிலிலேயே நின்று தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த ஆசாரிப்பள்ளம் போலீஸாா் அங்கு சென்று, மாணவா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகத்திடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து சுமாா் 2 மணி நேரத்துக்கு பின்னா் மாணவா்கள் அடையாள அட்டையை காட்டி கல்லூரிக்குள் செல்லலாம் என்று கல்லூரி நிா்வாகம் அறிவுறுத்தியது.

அதன் பின்னா் மாணவா்கள் கல்லூரிக்குள் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com