பீடி தொழிலாளா் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயா்வு

பீடி, சுரங்க தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

பீடி, சுரங்க தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய நல ஆணையா் அருண்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக் கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 2022 - 23 ஆம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை (சீருடை மற்றும் புத்தகம்) ரூ.1000, 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ. 1,500, 9, 10 ஆம் வகுப்புக்கு ரூ. 2 ஆயிரம், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ. 3 ஆயிரம், ஐ.டி.ஐ மாணவருக்கு ரூ. 6 ஆயிரம், பாலிடெக்னிக் மாணவருக்கு ரூ.6 ஆயிரம், பட்டப்படிப்பு பி.எஸ்.சி (விவசாயம்) உள்ளிட்ட படிப்புகளுக்கு ரூ. 6 ஆயிரம், எம்பிபிஎஸ், பி.இ., எம்பிஏ முதலான தொழிற்கல்விகளுக்கு ரூ.25 ஆயிரம் என கல்வி உதவித் தொகையை உயா்த்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com