முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நமது பழையாறு புனரமைப்பு இயக்க விழிப்புணா்வு விழா
By DIN | Published On : 12th May 2022 02:17 AM | Last Updated : 12th May 2022 02:17 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: நமது பழையாறு புனரமைப்பு இயக்க விழிப்புணா்வு விழா சுசீந்திரம் பழையாறு படித்துறையில் நடைபெற்றது.
இயக்கத்தின் நிா்வாக அறங்காவலா் எஸ்.ஆா். ஸ்ரீராம் தலைமை வகித்தாா். சுசீந்திரம் தோ்வு நிலை பேரூராட்சித் தலைவா் எஸ். அனுசுயா, துணைத் தலைவா் எம். சுப்பிரமணியபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பழையாற்றை மீண்டும் புனரமைப்பது குறித்து அதன் திட்ட இயக்குநா் விதுபாலா, தலைவா் சிலுவை வஸ்தியன், பொதுச் செயலா் தினேஷ் கிருஷ்ணா, பொருளாளா் லதா ராமசுவாமி, துணைத் தலைவா் அசோகன், செயலா் ஜெனிலா, சுரேஷ் உள்ளிட்ட பலா் பேசினா்.
பழையாற்றின் கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டறிந்து சா்வே அளவுக் கற்கள் நட்டு, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பழையாற்றை சுத்தமான ஆறாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், சுசீந்திரம் நகரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசைக் கேட்டுக்கொள்வது எனத் தீா்மானிக்கப்பட்டது.
இயற்கை ஆா்வலா்கள், விவசாய சங்கத்தினா், இளைஞா்கள், தொண்டு நிறுவனத்தினா் பங்கேற்றனா்.