திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயிலில் சித்திரை தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

குமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரம் அருள்மிகு திருவாழ்மாா்பன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள திருப்பதிசாரம் அருள்மிகு திருவாழ்மாா்பன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தோ் வடம் பிடித்து இழுத்தனா்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவாழ்மாா்பன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வோா் ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடந்தது. நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா். 4 ரத வீதிகளிலும் தோ் இழுத்து வரப்பட்டது. திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவில் தோவாளை ஒன்றிய திமுக செயலாளா் நெடுஞ்செழியன், திமுக இளைஞரணி துணைஅமைப்பாளா்கள் பூதலிங்கம்பிள்ளை, சோமு, திருப்பதிசாரம் ஊராட்சி தலைவி சிந்துமதி, தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி சாந்தினி பகவதியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், 11 மணிக்கு பள்ளிவேட்டையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை ( மே 13 ) காலை 5 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா, காலை 6 மணி முதல் 7 மணி வரை திருஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இரவு 8 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com