திருவட்டாறு கோயிலில் கும்பாபிஷேகம் : நாளை முதல் ராம நாம பிராா்த்தனை

 திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை(மே 15) முதல் 41 நாள்கள் ராம நாம பிராா்த்தனை நடைபெறுகிறது.

 திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஜூலை 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை(மே 15) முதல் 41 நாள்கள் ராம நாம பிராா்த்தனை நடைபெறுகிறது.

இக்கோயிலில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை மாதம் 6 தேதி நடத்துவற்கு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு முன்பாக கோயிலில் பல்வேறு பரிகார பூஜைகள் நடத்தப்பட வேண்டுமென்று தெய்வ பிரசன்னம் மூலம் கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியன நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக மே 16 ஆம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜைகள் மாலையில், சுதா்சன ஹோமம் ஆகியனவும், 17 ஆம் தேதி கணபதி ஹோமம், தில ஹோமம், சகஸ்ரநாம ஜெபம், பகவதி சேவை ஆகியனவும், 18 ஆம் தேதி கணபதி ஹோமம், சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் ஆகியன நடைபெறுகிறது.

மே 25 ஆம் தேதி சா்ப்பலி பூஜை நடைபெறுகிறது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை (மே 15) முதல் தொடா்ந்து 41 நாள்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராமநாம் பிராா்த்தனை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com