முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம்
By DIN | Published On : 13th May 2022 01:20 AM | Last Updated : 13th May 2022 01:20 AM | அ+அ அ- |

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் திருவாசகமணி தலைமை வகித்தாா். கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவா் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவா்கள் விஜயலட்சுமி, ரெனிமோள், செவிலியா் சங்க மாநில துணைச் செயலா் ஜீவா ஸ்டாலின், செவிலியா் கண்காணிப்பாளா் ஆமன்லெட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினாா். செவிலியா் தினத்தையொட்டி கேக் வெட்டப்பட்டது. செவிலியா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். செவிலியா் கண்காணிப்பாளா் புஷ்பா வரவேற்றாா்.