குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம்: மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லியண்ட்தாஸ் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் ஏ. முருகானந்தம் முன்னிலை வகித்தாா்.

ரயில்வே துறையில் இம்மாவட்டம் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறது. எனவே, இம்மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே துறையில் தனிக் கோட்டம் அமைக்க வேண்டும்.

இம்மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோா் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள மண்டல புற்றுநோய் மையத்துக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில் இங்கேயே மண்டல புற்றுநோய் மையம் அமைக்க வேண்டும். இம்மாவட்டத்தில் மாா்ஷல் நேசமணி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லெமூா் கடற்கரையில் சுற்றுலாப்பயணிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் எம். ஜான்சிலின்விஜிலா, பி. அம்பிளி, ஏ. செலின்மேரி, கொ. லூயிஸ், ப. ராஜேஸ்பாபு, தே. ஷா்மிளாஏஞ்சல், ஈ. நீலபெருமாள், சி. ஜோபி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com