பேச்சிப்பாறை அருகே காட்டு யானை உயிரிழப்பு

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியை ஒட்டிய பழங்குடிகளின் விளைநிலத்தில் காயத்துடன் நின்ற காட்டு யானை வியாழக்கிழமை உயிரிழந்தது.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியை ஒட்டிய பழங்குடிகளின் விளைநிலத்தில் காயத்துடன் நின்ற காட்டு யானை வியாழக்கிழமை உயிரிழந்தது.

களியல் வனச்சரகத்திற்குள்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிகமாக காணப்படுகின்றன. இதில் மோதிரமலை கோலிஞ்சிமடம் பகுதியில் பழங்குடி காணி ஒருவரின் விளைநிலத்தில் வயதான பெண் யானை காலில் காயத்துடன் வியாழக்கிழமை காலையில் நின்று கொண்டிருப்பதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா். வனத்துறையினா் அங்கு விரைந்து சென்று யானைக்கு உணவு கொடுத்து அதனை காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும் அந்த யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இந்நிலையில் நண்பகல் 1 மணி அளவில் அந்த யானை திடீரென்று சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தது.

சம்பவ இடத்திற்கு உதவி வனப்பாதுகாப்பாளா் சிவகுமாா் மற்றும் மருத்துவக் குழுவினா் சென்று உயிரிழந்த யானையை பாா்வையிட்டனா். மேலும் யானையின் உடற்கூறாய்வு பரிசோதனை செய்யும் வகையிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனா். யானையின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com