முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
ஆற்றூா் பேரூராட்சியில் தூய்மை விழிப்புணா்வுஇருசக்கர வாகனப் பேரணி
By DIN | Published On : 15th May 2022 12:12 AM | Last Updated : 15th May 2022 12:12 AM | அ+அ அ- |

ஆற்றூா் பேரூராட்சியில் தூய்மை விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இம்மாவட்டத்தில் ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 2, 4ஆவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிா்வாகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெறுகின்றன.
ஆற்றூா் பேரூராட்சியில் தூய்மைப் பணிகளுடன், தூய்மையை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியும் நடைபெற்றது. பேரூராட்சிஅலுவலகம் முன் தொடங்கிய பேரணியை பேரூராட்சித் தலைவா் பீனா அமிா்தராஜ் தொடக்கிவைத்தாா். செயல் அலுவலா் மகேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.