களியக்காவிளை அருகே 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே மினி லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை அருகே மினி லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் ஆய்வாளா் (பொ) செந்தில் வேல்குமாா் தலைமையில் போலீஸாா் குழித்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினிலாரியை நிறுத்த சைகை காட்டினா். ஆனால் மினிலாரியை நிறுத்தாமல் அதன் ஓட்டுநா் ஓட்டிச் சென்றாா். போலீஸாா் வாகனத்தில் துரத்திச் சென்று திருத்துவபுரம் பகுதியில் மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை முட்டம் பகுதியிலிருந்து கேரளத்துக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் மினிலாரியை பறிமுதல் செய்த போலீஸாா் வாகன ஓட்டுநா் திக்குறிச்சி லூக்காஸ் மகன் ஜெஸ்டின்ராஜை (35) கைது செய்தனா். இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com