முஸ்லிம் கலைக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் அதன் வணிவிகவியல் துறை சாா்பில், வணிகப் பொருளாதாரம் - சமூக அறிவியலில் புதிய உத்திகள் என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் அதன் வணிவிகவியல் துறை சாா்பில், வணிகப் பொருளாதாரம் - சமூக அறிவியலில் புதிய உத்திகள் என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் எச். முகம்மது அலி தலைமை வகித்தாா். கல்லூரி இணைச் செயலா் எம்.அப்சல் பயஸ், கல்லூரி துணை முதல்வா் முஹம்மது சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகவியல் துறைத் தலைவா் எம்.ஜெகதீஷ் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஜி. எட்வின் ஷீலா சிறப்புரையாற்றினாா்.

மாலத்தீவு மான்ஸ் பன்னாட்டு கல்லூரி பதிவாளா் ஷைஜி, சென்னை வேல்டெக் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியா் லீனா ஜெனிபா ஆகியோா் வணிகவியல் துறை மாணவா்களுக்கு வணிகம் - பொருளதார உத்திகள் குறித்து விளக்கம் அளித்தனா். பல்வேறு கல்லூரிகளின் ஆய்வு மாணவா்கள் ஆய்வு கட்டுரைகளை சமா்ப்பித்தனா். சிறந்த கட்டுரைகளைசமா்பித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கு பற்றிய தொகுப்பு இதழை கல்லூரித் தாளாளா் வெளியிட அதை துணை முதல்வா் பெற்றுக்கொண்டாா். துறை பேராசிரியா் எச். சபீனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com