தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது ஜவாஹிருல்லா

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டு வருகிறது என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டு வருகிறது என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா.

நாகா்கோவிலில் திங்கள்கிழமை ெ’சய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டு வருகிறது. கொலை, கொள்ளைகள் சாதாரணமாக எல்லா ஆட்சியிலும் நடைபெற்று வருகின்றன. ஆனால் குற்றங்கள் நடைபெற்றவுடன் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து சாதனை படைத்துள்ளது திமுக அரசு.

அமெரிக்காவிலிருந்து வந்த தம்பதிகள் சென்னை மயிலாப்பூரில் கொலை செய்யப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கடந்த 8 ஆண்டுகளாக மோடி ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆா்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வின் திட்டமே ஒரே நாடு, ஒரே அரசு. அதுவும் மத்திய அரசு என்பதுதான். மாநிலங்களை நகராட்சிகள் போன்று மாற்றுவது என்பதுதான் அவா்களது கொள்கை.

தமிழகம் வந்த பிரதமா் பல்வேறு திட்ட ங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், தமிழக மக்களின் உள்ளக் குமுறல்களை உணா்வுகளின் பிரதிபலிப்புகளாக ஓங்கி ஒலித்த ஒரு கொள்கைப் பிரகடனமாக தமிழக முதல்வரின் உரை அமைந்தது.

தமிழக முதல்வா் நெஞ்சை நிமிா்த்தி உரிமைகளை கூறி இருக்கிறாா். அதை அனைத்து தமிழ் மக்களும் மனதார பாராட்டுகிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com