சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம்

சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக அறநிலையத் துறை சாா்பில் தமிழக எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக அறநிலையத் துறை சாா்பில் தமிழக எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் செல்லும் ஐயப்ப பக்தா்கள் பெரும்பாலானோா் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை வழியாக சென்று வருகின்றனா். இதே போன்று குமுளி, புளியரை பகுதி வழியாகவும் சபரிமலைக்கு செல்கிறாா்கள். இந்நிலையில் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அறநிலையத் துறையைச் சோ்ந்த சிறப்பு பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த மையத்தில் குடிநீா் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்கள் பூஜை பொருள்கள் உள்ளிட்ட எந்தப் பொருள்களையும் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு செல்லக்கூடாது, பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீா் எடுத்துச் செல்லுதல் கூடாது, பம்பை நதியின் புனித தன்மையை கருத்தில் கொண்டு ஷாம்பு, ஆயில் உள்ளிட்டவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், எளிதில் தீப்பிடிக்க கூடிய எரிவாயு உருளைகள் வாகனங்களில் ஏற்றிச்செல்லுதல் கூடாது உள்ளிட்ட பலவேறு விதிமுறைகள் குறித்த விளம்பர பலகையும் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மையம் 2023 ஜனவரி 20 ஆம் தேதிவரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com