மாா்த்தாண்டத்தில்புகைப்படக் கலைஞா்கள்நலச் சங்க செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 28th November 2022 12:30 AM | Last Updated : 28th November 2022 12:30 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜாண் முன்னிலை வகித்தாா்.
செவ்வாய்க்கிழமை (நவ. 28) நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்ய வேண்டும், தோ்தல் அலுவலராக மாதவன், உதவியாளராக ஜெயின் சிங் ஆகியோரைத் தோ்வு செய்வது, சங்க உறுப்பினா்களுக்கான விபத்து நிதியை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டனா்.
கூட்டத்தில், பொருளாளா் ராஜேஷ், விஜு, கிறிஸ்டோபா், சந்தோஸ், மோகன் உளிட்ட பலா் பங்கேற்றனா்.