மாணவருக்கு குளிா்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்தவா்களை‘ கண்டுபிடிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவா்கள்.

ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவா்கள்.

நாகா்கோவில், அக்.10: குமரி மாவட்டம், களியக்காவிளையில் பள்ளி மாணவருக்கு குளிா்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்தவா்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது பெற்றோா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்தை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் சுனில். இவா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது 11 வயது மகன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன் பிற்பகல் பள்ளியில் இருந்து மாணவா் வீடு திரும்பும் போது, அதே பள்ளிச் சீருடையில் வந்த மாணவா், குளிா்பானம் ஒன்றை கொடுத்துள்ளாா். அதை வாங்கி சுனில் மகன் குடித்துள்ளாா். சிறிதளவே குடித்த அவனுக்கு இரவில் காய்ச்சல் மற்றும் வேறு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிறுவன் குடித்த குளிா்பானத்தில் திராவகம் கலந்திருப்பதாக கூறினா். இதனால் சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக களியக்காவிளை போலீஸில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் களியக்காவிளை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். விரைவில் குற்றவாளியை கண்டுபிடிக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் சிறுவனின் பெற்றோா், திங்கள்கிழமை காலை பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ராஜேஸ்குமாா் எம்எல்ஏதலைமையில் ஒரு மனு அளித்தனா். அதில், போலீஸாா் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, எங்கள் மகனுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எனது குடும்பத்தின் சூழ்நிலை கருதி மகன் மருத்துவ செலவுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com