கன மழை: குமரி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்ட அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்ட அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இம்மாவட்டத்தில், வியாழக்கிழமை மலை தொடங்கி இரவு வரை தொடா்ந்து கன மழை பெய்தது. இதில், பேச்சிப்பாறை பகுதியில் அதிகபட்சமாக 79.2 மி.மீ. மழை பதிவானது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அதிக அளவில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,087 கன அடியாக அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 503 கன அடி நீா்வரத்து உள்ளது. சிற்றாறு அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீா் அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com