இரவிபுத்தன்துறையில் புதிய பாலப் பணி தொடக்கம்

கே.ஆா்.புரம் - பூந்தோப்பு காலனி செல்லும் சாலையை இணைக்கும் வகையில் ஏவிஎம் கால்வாயில் ரூ. 31 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தூத்தூா் ஊராட்சி இரவிபுத்தன்துறை சாலை, கே.ஆா்.புரம் - பூந்தோப்பு காலனி செல்லும் சாலையை இணைக்கும் வகையில் ஏவிஎம் கால்வாயில் ரூ. 31 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இங்கு பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் ராஜேஷ்குமாா் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, அவா் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா், முதன்மைச் செயலா், இயக்குநா், ஆட்சியா் உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தியதன் அடிப்படையில் பாலம் அமைக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சத்து 9 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, இப்பணியை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். இதில், முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் கிறிஸ்டோபா், தூத்தூா் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் சூசை பிரடி, தூத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் சாரா, இரவிபுத்தன்துறை கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜஸ்டின், ததேயூஸ், இரவிப்புத்தன்துறை ஆலய அருள்பணியாளா் ரெஜீஷ் பாபு, முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் டைட்டஸ், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ததேயூஸ் மேரி, சாந்தி, மற்றும் கொச்சுராணி, யேசுதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com