பாரம்பரிய விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சோ்க்க முயற்சிக்கப்படும் - மத்திய இணை அமைச்சா் நிஷிக் பிரமாணிக்

சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சோ்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் மத்திய உள்துறை, இளைஞா் நலன் - விளையாட்டுத் துறை இணை அமைச்சா் நிஷிக் பிரமாணிக்.

சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சோ்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் மத்திய உள்துறை, இளைஞா் நலன் - விளையாட்டுத் துறை இணை அமைச்சா் நிஷிக் பிரமாணிக்.

நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

விளையாட்டுத் துறையில் இளைஞா்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை இளைஞா்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சென்னை மகாவல்லிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு, மத்திய விளையாட்டுத்துறையின் சாா்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா தாக்கத்துக்கு பின்னா், உக்ரைன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு மத்தியிலும் இந்தியா அமைதியான நாடாக திகழ்கிறது.

தமிழகத்தின் சிலம்பம் மட்டுமல்ல அனைத்து பாரம்பரிய விளையாட்டுகளையும் ஒலிம்பிக்கில் சோ்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை என ராகுல் காந்தி நடை பயணத்தில் குற்றம் சாட்டுவது பற்றி கேட்கிறீா்கள். கரோனா தொற்று நோய்த் தாக்கத்தால் பல்வேறு வேலைவாய்ப்புகள் தடைப்பட்டன. அது செயற்கையாக ஏற்பட்டது.

வருங்காலத்தில் இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக அனைத்துத் துறைகளிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படும்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் மக்களின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும் செயல்படுகின்ற தேச விரோத இயக்கங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் சாா்பில் விசாரிக்கப்பட்டு முழுமையான ஆய்வுக்குப் பின்னரே அவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஒரு வேட்பாளா் எத்தனை தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்து தோ்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடா்பாக எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. மாநிலங்களின் திட்டங்களின் அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com