குழித்துறையில் தரமற்ற சாலைப் பணி தடுத்து நிறுத்தம்

குழித்துறையில் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பணியை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினாா்.

குழித்துறையில் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பணியை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினாா்.

கன்னியாகுமரி - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையடுத்து, இச் சாலையில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள குழித்துறையிலிருந்து களியக்காவிளை வரை செப்பனிட ரூ. 15 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், குழித்துறை ஆற்றுப்பாலம் பகுதியில் இப் பணியை அமைச்சா் மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள பெரிய பள்ளங்களில் ஜல்லி நிரப்பாமல் செப்பனிடும் மேற்கொண்டதாம்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தொகுதி எம்.பி. விஜய் வசந்த், அப்பகுதியில் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணியை தடுத்து நிறுத்தினாா்.

அவருடன் குமரி மேற்கு மாவட்ட தலைவா் பினுலால் சிங், காங்கிரஸ் மாநிலச் செயலா் பினில்முத்து, மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஏ. சுரேஷ் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com