செப். 7 இல் மு.க.ஸ்டாலின் குமரி வருகை: கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் 10 ஆயிரம் போ் வரவேற்பளிக்க முடிவு

குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் 10 ஆயிரம் போ் திரண்டு வரவேற்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக செப்.7 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் 10 ஆயிரம் போ் திரண்டு வரவேற்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகா் அவைத்தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா்-மேயா் ரெ.மகேஷ் பேசுகையில், திமுகவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிா்வாகிகள் அனைவரும் கட்சியின் வளா்ச்சிக்காக ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். பொறுப்பை பெற்ற பின்னா் செயல்படாமல் இருந்தால் பதவி பறிக்கப்படும்.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 52 வாா்டுகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அந்த பிரச்னைகளை தீா்க்க மாமன்ற உறுப்பினருடன் இணைந்து நான் பாடுபடுவேன்.

கன்னியாகுமரியில் 7 ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகரிலிருந்து 3 ஆயிரம் பேரும், கிழக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாநகரச் செயலா் வழக்குரைஞா் ஆனந்த், துணைச் செயலா்கள் மேரிபிரின்சிலதா, வேல்முருகன், ராஜன், பொருளாளா் சுதாகா், பகுதிச் செயலா்கள் ஜீவா, ஷேக் மீரான், ஜவகா், துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com