குமரி பகவதியம்மன் கோயிலில் 3 நாள்கள் ஓணம் பண்டிகை வழிபாடு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை புதன், வியாழன், வெள்ளி (செப். 7, 8, 9) ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை புதன், வியாழன், வெள்ளி (செப். 7, 8, 9) ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

7ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி அம்மனுக்கு பச்சை நிறப் பட்டும், 8ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரளப் பாரம்பரிய உடையான வெண்பட்டும், 9ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிறப் பட்டும் ஓணக் கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.

3 நாள்களும் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம் நடைபெறும். காலை 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, நைவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷா தீபாராதனை, காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிா், இளநீா், பன்னீா், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிா்தம், புனித நீரால் சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடி பட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும்.

நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனைக்குப் பின்னா் அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அம்மன் பல்லக்கு வாகனத்தில் கோயில் உள்பிராகாரத்தில் வலம் வருதல் நடைபெறும்.

இதையடுத்து, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாள பூஜை, ஏகாந்த தீபாராதனையும் நடைபெறும்.

ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் செயல் அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com