கருணாநிதி பிறந்த நாள்: போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

குமரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது.

குமரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் மா.அரவிந்த் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினாா். அவா் பேசியது:

கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில், பேயன்குழி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி ஹரிசபரிஷாவுக்கு முதல் பரிசும், நாகா்கோவில் டதி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜா.லீனஸ்ஷேரனுக்கு 2 ஆம் பரிசும், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி நா.சீ.நந்தனாவுக்கு 3 ஆம் பரிசும், மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி, கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பபினா சொ்லின் ஆகியோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

கல்லூரி அளவில், தெ.தி. இந்துக் கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியாவுக்கு முதல் பரிசும், நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி சுப்புலெட்சுமிக்கு, 2 ஆம் பரிசும், முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை கல்லூரி மாணவி விஜித்ராவுக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவி வி.பிறைஸ்னீம் முதல் பரிசும், கோட்டாறு கவிமணி அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி இ.பிரம்ம அக்ஷயா 2 ஆம் பரிசும், ஆளுா்அரசுமேல்நிலைப் பள்ளி மாணவிசி.அ.சிவபிரியா 3 ஆம் பரிசும் பெற்றனா்.

பேச்சுப் போட்டிகளில் நாகா்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி மாணவி ரஷ்மிக்கு முதல் பரிசும், ஆளுா்அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.சுகைனா பாத்திமாவுக்கு 2 ஆம் பரிசும், தெங்கம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.அகஸ்தியாவுக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தே.திருப்பதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com