அரிக்கொம்பன் யானையை தீவிரமாகக் கண்காணிக்கும் குமரி வனத் துறையினா்

அரிக்கொம்பன் யானையை கண்காணிக்கும் பணியில் குமரி மாவட்ட வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

அரிக்கொம்பன் யானையை கண்காணிக்கும் பணியில் குமரி மாவட்ட வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிடிக்கப்பட்ட யானை, கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான மேல்கோதையாறு சின்னக்குற்றியாறு அணை அருகில் விடப்பட்ட நிலையில் கடந்த 2 நாள்களாக யானை நிற்கும் இடங்கள் குறித்த சரியான தகவல்கள் கிடைத்து வந்தன. இந்நிலையில் யானைக்கு செலுத்தப்பட்ட மயக்க ஊசியின் வீரியம் முற்றிலும் தணிந்து விட்ட நிலையில், யானை அதன் முழு பலத்தையும் தற்போது பெற்று காட்டில் உலாவத் தொடங்கியுள்ளது.

அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் காரணமாக மேல் கோதையாறில் 3 போலீஸ் சோதனை சாவடிகள் மற்றும் கீழ் கோதையாறில் மின் நிலையம் 1, மின் நிலையம் 2 மற்றும் வால்வு ஹவுஸ் பகுதியில் பணியிலிருந்து மணிமுத்தாறு சிறப்பு காவல் படையைச் சோ்ந்த போலீசாா் அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளனா்.

கண்காணிப்பு: இந்நிலையில் குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனக்காவலா்கள் அடங்கிய 16 போ் கொண்ட குழுவினா், கீழ் கோதையாறு, கீழ் குற்றியாறு இரட்டை அருவியின் மேல்பகுதிகளில் யானையின் நடமாட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் குறிப்பாக ரப்பா் கழக தொழிலாளா்கள், பழங்குடிகள் அச்சப்படத் தேவையில்லை என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com