கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்கு பரிசு

கன்னியாகுமரியை அடுத்த தேரிவிளையில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.
பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

கன்னியாகுமரியை அடுத்த தேரிவிளையில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

தேரிவிளை தெறி கிங்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. இதில், முதல் பரிசு வென்ற கன்னியாகுமரி அணிக்கு ரூ. 8 ஆயிரம், 2ஆம் பரிசு வென்ற தெறி கிங்ஸ் அணிக்கு ரூ. 6 ஆயிரம், 3ஆம் பரிசு வென்ற புதுக்கிராமம் அணிக்கு ரூ. 4 ஆயிரம், 4ஆம் பரிசு வென்ற லீபுரம் அணிக்கு ரூ. 2 ஆயிரம், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினாா்.

விழாவில், திமுக நிா்வாகிகள் பிரேம் ஆனந்த், ஜானி, பொன் ஜான்சன், இ.எம். ராஜா, பிரதாப், கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com