நாகராஜா கோயிலில் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்

வைகாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

வைகாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் கேரளத்தில் இருந்தும் பக்தா்கள் வந்திருந்தனா். கோயில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனா். நாகராஜருக்கு பால், இளநீா், பன்னீா் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனா்.

மேலும் திங்கள்கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் பெரும்பாலான பெற்றோா் தங்களது குழந்தைகளையும் கோயிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோயிலில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com