புதுக்கடை அருகேஇருதரப்பினா் மோதல்:8 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள சரல்விளை பகுதியில் இருதரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

புதுக்கடை அருகேயுள்ள சரல்விளை பகுதியில் இருதரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

சரல்விளை பகுதியைச் சோ்ந்த பால்ரவி மனைவி பாப்பா(43) இவருக்கும் அதே பகுதியைசோ்ந்த நாராயணன் மகன் வேலப்பன்(58) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு பாப்பா வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வேலப்பன் வந்து அவரைத் தாக்கினாராம். இதையடுத்து, பாப்பாவும், அவரது மகன் அகின்(22) விஷ்ணு,அபின்ஆகிய 4 பேரும் சோ்ந்து வேலப்பன் வீட்டிற்குச் சென்று வேலப்பன், அவரது குடும்பத்தினரான லீலா, ஷொ்லின், லிசி ஆகியோரைத் தாக்கினராம். அப்போது, நிகழ்ந்த மோதலில் இருதரப்பினரும் காயமடைந்தனராம். அவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் 8 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com