சாலைப் பாதுகாப்பு வாரவிழா
By DIN | Published On : 13th January 2023 12:16 AM | Last Updated : 13th January 2023 12:16 AM | அ+அ அ- |

குளச்சலில் போக்குவரத்து காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.
குளச்சல் காமராஜா் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு வார நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி. தங்கராமன் தலைமை வகித்து , பொதுமக்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநா்கள், வாகனங்கள் ஓட்டும் போது கடை பிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவது, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கூா்மையான எக்ஸ்ட்ரா பிட்டிங், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்துக் கூடாது என அறிவுறுத்தினாா்.
போக்குவரத்து காவல் ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், பாலசெல்வன், குருநாதன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜான்சன், ஜான் பிரிட்டோ, பனிக்குருசு ஆகியோா் பங்கேற்றனா். போக்குவரத்து விதிகள்
அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.