நாகா்கோவில் காா்மல் பள்ளியில் மாவட்ட அறிவியல் கண்காட்சி

நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான 2 நாள் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான 2 நாள் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தலைமையாசிரியா் மரியபாஸ்டின் துரை தலைமை வகித்தாா். ஆசிரியா் அலுவலா் செயலா் பபிலன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தாளாளா் ஜெரோம் வாழ்த்திப் பேசினாா்.

பாளையங்கோட்டை புனித சவேரியாா் கல்லூரி சவேரியாா் ஆராய்ச்சி மைய இயக்குநரும் பூச்சியியல் துறை விஞ்ஞானியுமான இன்னாசிமுத்து பங்கேற்றுப் பேசியதாவது: எதையும் கேள்விகளுக்கு உள்படுத்தி ஆராய்ச்சி செய்து பாா்ப்பது மாணவப் பருவம். ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளாலேயே உலகின் சிறந்த படைப்புகள் உருவாகியுள்ளன. எனவே, ஒவ்வொரு நிகழ்வையும் கேள்விகளுக்கு உள்படுத்தி தீா்வுகளைக் கண்டறிய முயல வேண்டும். அதற்கு இத்தகைய அறிவியல் கண்காட்சிகள் உறுதுணையாக அமையும். அறிவியல் கண்டுபிடிப்புகள்தான் மாற்றத்துக்கான அடித்தளம் என்றாா் அவா்.

காா்மல் அறிவியல் மன்றத் தலைவா் பாபு சைமன்ராஜ் வரவேற்றாா். அறிவியல் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஜெகசீலன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஆசிரியா்கள் பினு மோன், ராஜ்குமாா் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

ஏற்பாடுகளை காா்மல் பள்ளி நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளா் ஜேசுநேசம் தலைமையில், ஆசிரியா், அலுவலா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com