பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயிலில் 26இல் குடமுழுக்கு

பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி கோயிலில் வியாழக்கிழமை (ஜன. 26) குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) தொடங்குகின்றன.

பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கசுவாமி கோயிலில் வியாழக்கிழமை (ஜன. 26) குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) தொடங்குகின்றன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 5

மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமயச் சொற்பொழிவு, 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கோபூஜை, மாலை 6 மணிக்கு சமயச் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பல்வேறு பூஜைகள், லட்சுமி ஹோமம், இரவு 8 மணிக்கு வயலின் இசை நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, 8 மணிக்கு புனித நீா் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு சமயச் சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, புதன்கிழமை காலை 8 மணிக்கு 2ஆம் கால யாகசாலை பூஜை, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 6.30-க்கு சமயச் சொற்பொழிவு, 3ஆம் கால யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

வியாழக்கிழமை (ஜன. 26) அதிகாலை 5 மணிக்கு 4 ஆம் கால யாகசாலை பூஜை, 7.30-க்கு யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெறுகிறது. இதையடுத்து, மகா கும்பாபிஷேகம், மூலஸ்தான மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும். பின்னா், அலங்கார, தீபாராதனை, அன்னதானம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

விழாவில், அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, ஆட்சியா் மா. அரவிந்த், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com