களியக்காவிளையில் பால் தாக்கரே பிறந்தநாள் விழா
By DIN | Published On : 24th January 2023 12:57 AM | Last Updated : 24th January 2023 12:57 AM | அ+அ அ- |

களியக்காவிளையில், சிவசேனை கட்சி முன்னாள் தலைவா் பால்தாக்கரேவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு சிவசேனை கட்சி சாா்பில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பால் தாக்கரே படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகளும், இலவச பகவத் கீதை நூல்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட இளைஞரணித் தலைவா் சந்தோஷ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ரமேஷ்குமாா் தலைமையில் நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். மாநில கொள்கை பரப்புச் செயலா் தங்கபாண்டியன், களியக்காவிளை பேரூா் தலைவா் சுரேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.