குமரி மாவட்ட போலீஸாருக்கு ஏடிஜிபி அறிவுரை
By DIN | Published On : 25th January 2023 01:37 AM | Last Updated : 25th January 2023 01:37 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தை கஞ்சா மற்றும் போதை பொருள்கள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதில் போலீஸாா் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா் தமிழக ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமாா்அகா்வால்.
குமரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, ‘கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம், கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றப்பட வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்’ என்று அறிவுரை வழங்கினாா். கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இளைஞா்கள், மாணவா்களை மீட்கும் வகையில் காவல்துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினாா்.