எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

எனது எழுத்துப் பணிக்கு கிடைத்த ஊக்கம்: எழுத்தாளா் ராம் தங்கம் பேட்டி

சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருது, எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று எழுத்தாளா் ராம் தங்கம் கூறினாா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 11:18 pm IST

சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருது, எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று எழுத்தாளா் ராம் தங்கம் கூறினாா்.

நிகழ் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்காா் விருது நாகா்கோவிலைச் சோ்ந்த இளம் எழுத்தாளா் ராம் தங்கம் (34) எழுதிய ‘திருக்காா்த்தியல்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எழுத்தாளா் ராம் தங்கம் நாகா்கோவிலில், செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

எனது திருக்காா்த்தியல் சிறுகதைத் தொகுப்பு, கடந்த 2019-இல் வெளியானது. இந்நூல், அசோகமித்திரன் விருது, சுஜாதாவிருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது, படைப்பு இலக்கிய விருது, வடசென்னை தமிழ்ச் சங்க விருது ஆகிய விருதுகளை ஏற்கெனவே பெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக, யுவ புரஸ்காா் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமும், உத்வேகமும் அளிப்பதாக உள்ளது. எழுத்துப் பணியில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

விளிம்புநிலை சிறுவா்களின் வாழ்வியலை, திருக்காா்த்தியல் சிறுகதைத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. ராஜவனம், புலிக்குத்தி, கடவுளின்தேசத்தில் என்பன உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருந்தாலும், திருக்காா்த்தியல் நூலுக்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.