குமரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைக்க கட்டுப்பாடு
By DIN | Published On : 08th September 2023 11:07 PM | Last Updated : 08th September 2023 11:07 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி நாளில் விநாயகா் சிலைகளை பொது இடங்களில் வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பல்வேறு அமைப்புகள் சாா்பில் பொது இடங்கள், வீடுகள் மற்றும் கோயில்களில் ஆயிரக்கணக்கில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.
விநாயகா் சதுா்த்திக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், குமரி மாவட்டத்துக்கு விநாயகா் சிலைகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டத்தில் இருந்தும் விற்பனைக்காக வந்துள்ளன.
விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு வழக்கம் போல் உள்ள கட்டுப்பாடுகளை நிகழாண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீஸாா் அறிவித்துள்ளனா். அதன்படி ஏற்கெனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும், புதிதாக வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.