மாா்த்தாண்டன்துறை கடற்கரையில் தூய்மைப் பணி
By DIN | Published On : 19th September 2023 01:43 AM | Last Updated : 19th September 2023 01:43 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பேசிய மனிதவள நிபுணா் பி. ஜஸ்டின் ஆன்டணி.
களியக்காவிளை: கொல்லங்கோடு அருகே மாா்த்தாண்டன்துறை மீனவக் கிராமத்தில் சா்வதேச கடற்கரை தூய்மை நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை, திருவனந்தபுரம் உயா் மறைமாவட்டத்தின்கீழ் இயங்கும் தூத்தூா் வட்டார சமூக சேவை அமைப்பு ஆகியவை இணைந்து நிகழ்ச்சியை நடத்தின. மனிதவள நிபுணா் ஜஸ்டின் ஆன்டனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். அவா் பேசும்போது, அண்மைக்காலங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் ஆறுகள் உள்ளிட்ட பல்வேறு நீா்வழிகள் மூலம் கடல் பகுதிக்குச் செல்கின்றன. இதைத் தடுக்க பொதுமக்களும், சமூக சேவை அமைப்புகளும் பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், தூத்தூா் வட்டார சமூக சேவை அமைப்பின் நிா்வாகிகள் ரம்யா, சுனிஜா, சிசிலி, மேரி, பள்ளி, கல்லூரி மாணவியா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.