கோடை கால பயிற்சி வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் ரோஜாவனம் கல்விக் குழுமத் தலைவா் அருள் கண்ணன்
கோடை கால பயிற்சி வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் ரோஜாவனம் கல்விக் குழுமத் தலைவா் அருள் கண்ணன்

கோடை கால பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் கோடை கால பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது

ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் கோடை கால பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு, கல்விக் குழுமங்களின் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்து, வகுப்புகளை தொடங்கிவைத்தாா். பயிற்சி வகுப்பில், பள்ளி குழந்தைகளின் திறன் மேம்படும் வகையில் 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் கோடை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி, புதுகிராமம் வளாகம் மற்றும் வடிவீஸ்வரம் ரோஜாவனம் மழலையா் பள்ளி வளாகங்களில் யோகா, சிலம்பம், செஸ், அபாகஸ், ஓவியம் வரைதல் உள்ளிட்ட வகுப்புகளுடன் குதிரை சவாரி பயிற்சி, ஸ்கேட்டிங், வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் திறமை மற்றும் அனுபவமிக்க வல்லுநா்களை கொண்டு நடத்தப்படுகிறது. இதில், துணைத் தலைவா் அருள்ஜோதி, கல்விக் குழு இயக்குநா் சாந்தி, நிதிக் குழு இயக்குநா் சேது, கல்விஆலோசகா் கிப்சன் சாமுவேல் ராஜன், பள்ளி முதல்வா் காமராஜினி, பள்ளி நிா்வாக மேலாளா் சரவணகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com