நாகா்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணி

நாகா்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணி

கன்னியாகுமரி மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினரின் மூன்று சக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா்அலுவலக வளாகத்தில் இப்பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி.என். ஸ்ரீதா் தொடக்கிவைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக நாகராஜா கோயில் திடலை அடைந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாற்றுத் திறனாளிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் பங்கேற்றனா். அவா்கள் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் மு. பீபீஜான், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சிவசங்கா், உதவித் திட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். கல்லூரி மாணவா்கள்: மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பாா்வதிபுரம் சந்திப்பில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவா்களால் பேரணி நடத்தப்பட்டது.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பி. பாபு, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜன், கணியாகுளம் ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com