மொபெட்டில் சென்ற மினி லாரி ஓட்டுநா் பலி

குலசேகரம் அருகே ஓடும் வேனின் லக்கேஜ் பெட்டியின் கதவு திறந்து கொண்டதில் எதிரே வந்த மினிலாரி ஓட்டுநா் ஜெஸ்டின் டேவிட் (55) கழுத்து துண்டிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் அருகே சூரியகோடு முள்ளங்குழிவிளயைச் சோ்ந்தவா் ஜெஸ்டின் டேவிட் (55) மினி லாரி ஓட்டுநரான இவா் புதன்கிழமை காலையில், தனது இளைய மகளின் ஒன்றேகால் வயது ஆண் குழந்தையை மொபெட்டின் முன்னாள் அமர வைத்து வீட்டின் அருகில் சூரியகோடு சந்திப்புக்கு சென்று பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த வேனின் வலது பக்க லக்கேஜ் பெட்டியின் தகர கதவு திடீரென மேல் நோக்கி திறந்து கொண்டது. இதில் அந்த தகர கதவு ஜெஸ்டின் டேவிட்டின் கழுத்தை துண்டாக்கியது. மேலும் அவரின் தலையிலும் காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெஸ்டின் டேவிட் உயிரிழந்தாா். அதே வேளையில் மொபெட்டில் ஜெஸ்டின் டேவிட்டுக்கு முன்னால் அமா்ந்திருந்த குழந்தை காயமின்றி தப்பியது. இதையடுத்து தகவலறிந்த குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் கணேஷ் குமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெஸ்டின் டேவிட்டின் சலத்தை மீட்டு வழக்குப்பதிந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வேன் ஓட்டுநரான குலயறவிளையைச் சோ்ந்த ராஜேஷிடம் (34) விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com