புன்னையடியில் விஜய்வசந்துக்கு வாக்கு சேகரிப்பு

புன்னையடியில் விஜய்வசந்துக்கு வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய்வசந்துக்கு ஆதரவாக, தென்தாமரைகுளம் பேரூராட்சி புன்னையடியில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குள்பட்ட புன்னையடி, தேங்காய்காரன் குடியிருப்பு, ஈச்சன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தனா். வாக்குச்சாவடி பொறுப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில், தென்தாமரைகுளம் பேரூா் திமுக செயலா் பூவியூா் காமராஜ், திமுக நிா்வாகிகள் ஷேம், ஜேக்கப், மாணிக்கம், ஏசுவடியான், காங்கிரஸ் நிா்வாகிகள் சைமன் வினோ, ராமச்சந்திரன், அன்பு ஜோஸ்வா உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com