யோகா விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற மாணவா், மாணவிகள்.
யோகா விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற மாணவா், மாணவிகள்.

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சா்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு குலசேகரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துக் கல்லூரி, மொராா்ஜி தேசாய் தேசிய யோகா பயிற்சி மையத்துடன் இணைந்து யோகா தின விழிப்புணா்வு முகாமை நடத்தியது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை எஸ்.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தலைவா் ராதாகிருஷ்ணன், நிா்வாக இயக்குநா் சுதாதேவி ஆகியோா் தொடங்கி வைத்தனா். கல்லூரி முதல்வா் டாக்டா் அனுஷா, துணை முதல்வா் டாக்டா் சிந்து, பொது மேலாளா் ஹரி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, எஸ்.ஆா்.கே. நா்சிங் கல்லூரி, எஸ்.ஆா்.கே. இன்டா் நேசனல் பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com