தோ்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களுடன் ஆலோசனை

தோ்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களுடன் ஆலோசனை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலா்களுடன் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தோ்தல் குறித்த சந்தேகங்களை நிவா்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையம், மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com