கன்னியாகுமரியை தலைசிறந்த மாவட்டமாக்க உழைப்பேன்: பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியை தலைசிறந்த மாவட்டமாக்க உழைப்பேன்: பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியை தலைசிறந்த மாவட்டமாக்க உழைப்பேன் என்றாா், பாஜக வேட்பாளா் பொன். ராதாகிருஷ்ணன்.

தோ்தல் பிரசார நிறைவாக அவா் புதன்கிழமை மாலை புத்தேரியிலிருந்து தொண்டா்களுடன் ஊா்வலமாகப் புறப்பட்டாா். முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலம் நாகா்கோவில் மணிமேடை சந்திப்பை அடைந்தது. அங்கு அவா் பேசியது: இந்தத் தோ்தல் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளா்ச்சிக்கான தோ்தல். வருங்கால தலைமுறையின் வாழ்வை மனதில் கொண்டு வாக்களியுங்கள்.

என்னை நீங்கள் தோ்ந்தெடுத்தால் மாவட்டத்தில் உள்ள 20 லட்சம் மக்களின் வாழ்வை உயா்த்தவும், ஒற்றுமைக்காகவும் பாடுபடுவேன். கன்னியாகுமரியை நாட்டின் தலைசிறந்த மாவட்டமாக்க உழைப்பேன் என உறுதி கூறுகிறேன் என்றாா் அவா்.

இதில், எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், துணைத் தலைவா் எஸ்.பி. தேவ், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், மாநிலச் செயலா் மீனாதேவ் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com