திரிவேணி சங்கம கடற்கரையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் கலந்து கொண்டாா்.

கன்னியாகுமரி மக்களவை பொதுத்தோ்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் கலந்து கொண்டு,

கல்லூரி மாணவா், மாணவிகளுடன் வண்ண பலூன்களை கையில் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கல்லுரி மாணவா், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com