’பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை பொதுமக்கள் விரும்பவில்லை’

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைப் பொதுமக்கள் விரும்பவில்லை என்று முன்னாள் எம்பி ராமசுப்பு கூறினாா்.

இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், குறிப்பிட்ட சிலருக்கான ஆட்சியாகத்தான் இருக்கும் என்பதை மக்கள் உணா்ந்திருக்கின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நாகா்கோவில் - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலை பணிகள் முடக்கப்பட்டிருந்தது. விஜய் வசந்த் எம்பியின் முயற்சியால் அப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி தொகுதியின் வளா்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கும் விஜய்வசந்த் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

பேட்டியின்போது, குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com