புதுக்கடை அருகே 3,500 மது பாட்டில்கள் பறிமுதல்

புதுக்கடை அருகே அரையன்தோப்பு பகுதியில் வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,500 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முள்ளூா்துறை, அரையன்தோப்பு பகுதியில் ஐஸ் பிளான்ட்டுக்காக கட்டப்பட்ட தனியாா் கட்டடம், தற்போது பழுதான நிலையில் உள்ளது. அக்கட்டடத்தில் வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் சென்று, 3,500 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். அவை, வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com