குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள வடக்கு சூரங்குடி தட்டான்விளையை சோ்ந்த வெற்றிவேல் மகன் சிவன் (21). இவா் மீது ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளாா். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் வடக்கு சூரங்குடியில் ஏற்பட்ட பிரச்னையில் 5 பேரை கும்பலாக சோ்ந்து வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிவன் உள்ளாா். தலைமறைவாக இருந்த இவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்உத்தரவின் பேரில் சிவனை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சென்னை அமைந்தகரையை சோ்ந்தவா் புருக்கீளின் (37). இவா்

பாலியல் வழக்கில் தக்கலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகா்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து அவரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com