வள்ளவிளையில் வாக்குப்பதிவு தாமதம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வள்ளவிளை உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வள்ளவிளை உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது.

கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை மீனவ

கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக காலை 8.20 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.

இதேபோல நித்திரவிளை அருகே தூத்தூா் பயஸ் லெவன்த் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு செய்யும்போது இயந்திரத்தில் எரியும் விளக்கு வேறு வேட்பாளருக்கு மாற்றி காட்டுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தோ்தல் அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் சரிசெய்ய முடியாததால், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனால், 1 மணி 50 நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபட்டது.

குழித்துறை அரசு பெண்கள் துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் காலை 11.30 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. சுமாா் 20 நிமிடம் தாமதத்துக்குப் பின் மின்தடை சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு சீராக நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com