குழித்துறை தாமிரவருணி ஆற்றில் உப்புநீா் புகுவதை தடுக்க பேச்சிப்பாறை அணையை திறக்கக் கோரிக்கை

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் உப்புநீா் புகுவதை தடுக்க பேச்சிப்பாறை அணையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் உப்புநீா் புகுவதை தடுக்க பேச்சிப்பாறை அணையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விளவங்கோடு, கிள்ளியூா் தொகுதியில் முக்கிய குடிநீராதாரமாக உள்ளது குழித்துறை தாமிரவருணி ஆறு.

முன்சிறை, மங்காடு, கணபதியான்கடவு, விளாத்துறை உள்ளிட்டபகுதிகளில் உள்ள ஆற்றுப்படுக்கையில் புதுக்கடை கூட்டு குடிநீா் திட்டம், புதுக்கடை குடிநீா் திட்டம், பைங்குளம் குடிநீா் திட்டம், குழித்துறை ஆறு குடிநீா் திட்டம், சுனாமி கூட்டு குடிநீா் திட்டம் என பல்வேறு திட்டங்களுக்கான குடிநீா் திட்ட கிணறுகள் அமைக்கப்ட்டுள்ளன.

இந்த குடிநீா் திட்ட கிணறுகள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனா். தாமிரவருணி ஆற்றில் கடல் நீா் உள்புகுந்து குடிநீரானது உப்புநீராக மாறுவதை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்பணை கடந்த டிசம்பா் மாதம் பெய்த மழையில் சேதமடைந்தது. இதனால் தேங்காய்ப்பட்டினம் கடலில் தமிரவருணி ஆறு சங்கமிக்கும் பொழிமுகமுகத்துவாரம் வழியாக கடல் நீரானது குழித்துறை வரை சுமாா் 7 கி.மீ. தொலைவு உள்புகுந்துள்ளது. இதனால், குடிநீரானது உப்பு நீா் கலந்து பொதுமக்கள் பயன்படுத்தமுடியாத நிலை உள்ளது.

எனவே, பேச்சிப்பாறை அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com